இன்று முதல் முழுநேர ( PULMONOLOGIST ) நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை
மெகா இலவச மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்
டயாலிசிஸ் சிகிச்சை மையம்
இலவச டயாலிசிஸ் சிகிச்சை முகாம்
மருத்துவர்கள் விவரம்
Thyroid / தைராய்டு
FREE Delivery scheme for 120 pregnant women from
15.07.2022 as part of the 120th birthday celebration of Bharat Ratna Shri. K. Kamarajar.
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை புதிய மருத்துவப் பிரிவுகள் (03.08.2022) திறப்பு விழாவிற்கு அழைக்க நேரமின்மை மற்றும் இடைவிடாத மழையின் காரணமாக ஒரு சிலருக்கு மட்டும் நேரில் வந்து அழைப்பிதழ் வழங்க இயலாத சூழ்நிலை. ஆகையால் தயவு செய்து இதனையே நேரில் வந்து அழைப்பிதழ் வழங்கியதாக நினைத்து விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
வீரபாண்டியில் முல்லைப்பெரியார் ஆற்றங்கரை ஈமக்கிரியைகள் செய்யும் இடத்தில் பிரம்மாண்டமான நிழற்குடை. ரூ. 6 இலட்சம் மதிப்பில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை வழங்குகிறது. தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைப்பெரியார் ஆற்றங்கரை அருகே இறந்தவர்களுக்கு ஈமக்கிரியைகள் திறந்தவெளியில் செய்வது வழக்கம். தேனி மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்வதற்கு ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் இங்கு வந்து செல்வார்கள். ஆனால் மழைக்காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் தரையில் அமர்ந்து ஈமக்கிரியைகள் செய்வதற்கு பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் அங்கு ஒரு பெரிய அளவிலான நிழற்குடை அமைத்து தரவேண்டும் என்று பலவருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். தற்போது அதுபோன்ற கோரிக்கையை வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசியிடம் பொதுமக்கள் கடந்த மாதம் வைத்தார்கள். 120 அடி நீளமும் 20 அகலமும் கொண்ட பிரம்மாண்டமான நிழற்குடை அமைக்க சுமார் 6 இலட்சம் செலவாகும் என்பதால் தனியார் முயற்சியில் அமைக்க தீர்மானித்தார்கள். அதன் அடிப்படையில் தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனை நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து நிழற்குடை அமைக்க கோரினார்கள். அதனை ஏற்ற தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை நிர்வாகம் ரூ. 6 இலட்சம் சொந்த செலவில் அமைத்து தர முன்வந்தார்கள். இதனையடுத்து 15.03.2023 அன்று வீரபாண்டியில் ஈமக்கிரியைகள் செய்யும் இடத்தில் பூமிபூஜை செய்து இரும்பு கம்பிகள் வைத்து வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி புதிய நிழற்குடை கட்டுமான பணியை துவக்கி வைத்தார். விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுக நயினார், கணக்கர் வாசுமலை. 7 வது கவுன்சிலர் செல்வராஜ், திமுக பிரமுகர் சசி, நட்டாத்தி நாடார் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் சலீம் மற்றும் பரத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.